உலகம்

பஹல்காம் தாக்குதல்...சென்னையில் இருந்து வந்த ரகசிய தகவல்...இலங்கையில் சோதனை

By Jayakumar
03 May 2025, 05:42 PM
பஹல்காம் தாக்குதல் நடத்திய சந்தேக நபர்கள் விமானத்தில் இருப்பதாக இந்திய அதிகாரிகள் கொடுத்த தகவலின்பேரில் இலங்கை அதிகாரிகள் சோதனை
பஹல்காம் தாக்குதல்

பஹம்காம் பயங்கரவாத தாக்குதலில் 2 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இது நாடு முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு உலகின் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் பஹம்காம் பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடையதாக கூறப்படும் 6 பேரும் சென்னையில் இருந்து வந்த விமானத்தில் இலங்கைக்கு வந்ததாக இந்தியாவில் இருந்து வந்த ரகசிய தகவலை அடுத்து இன்று நண்பகல் கொழும்பு விமான நிலையத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இலங்கையில் சோதனை

இலங்கையில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் முழுமையாக சோதனை செய்யப்பட்டது. பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய நபர்கள் இந்த விமானத்தில் இருப்பதாக இந்திய அதிகாரிகள் இலங்கைக்கு தகவல் தெரிவித்ததாக காவல்துறை செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய நபர்கள் இலங்கைக்கு தப்பிச்செல்வதாக கிடைத்த தகவலின் பேரில் இலங்கை காவல்துறை, விமானப்படை, விமான நிலைய பாதுகாப்புப்பிரிவு இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சென்னையில் இருந்து கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து வந்த எச்சரிக்கையை தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும், விமானம் முழுமையாக சோதனை செய்யப்பட்டதாகவும், பின்னர் அனுமதிக்கப்பட்டதாகவும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.