உலகம்

டெல்லி அரசு முக்கிய அறிவிப்பு....கரப்பான்பூச்சி கட்சியினர் மீதான வழக்குகள் வாபஸ்!"

By Christon
30 Jul 2026, 07:12 PM
டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்வதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

இது உலகெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் வரலாற்றிலே எதற்கும் பணியாத ஒன்றிய அரசு தற்போது மாணவர்களின் போராட்டத்திற்கு பணிந்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் போராட்டத்தின் 36 நாள்களுக்கு பிறகு ஜூலை 25 ஆம் தேதி பதவி விலகினார்.

இந்தப் போராட்டத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் உள்பட பலரும் பங்கேற்றனர். மேலும் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்களும் பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து நீட் தேர்வு விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு, போராட்டத்தில் கலந்து கொண்டோர் மீது பதியப்பட்ட வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று மூன்று கோரிக்கைகள் மத்திய அரசிடம் கரப்பான் பூச்சி கட்சியினர் வைத்தனர்.

இந்நிலையில் போராட்டத்தில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் மீது போடப்பட்ட 13 வழக்குகளும் திரும்பப் பெறப்படுவதாகவும், போராட்டத்தின்போது தடுத்து வைக்கப்பட்டவர்களும் கைது செய்யப்பட்டவர்களும் விடுவிக்கப்படுவதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளனர்.