Kumudam News 24 X 7 AMP Article
உலகம்

மீண்டும் லெபனானை சீண்டிய இஸ்ரேல்... கொத்துக் கொத்தாக பலியாகும் உயிர்கள்

By JANANI
28 Oct 2024, 03:59 PM
லெபனான் மீது இஸ்ரேல் நேற்று மீண்டும் அதிரடி தாக்குதல் நடத்தியதில் 21 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. 

லெபனான் மீது இஸ்ரேல் நேற்று மீண்டும் அதிரடி தாக்குதல் நடத்தியதில் 21 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. 

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காஸாவின் ஹமாஸ் படைத் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டார். இதனையடுத்து ஹமாஸ் அமைப்பினர் போரை விட்டுவிட்டு தங்கள் நாட்டு பிணயக் கைதிகளை ஒப்படைக்க வேண்டும் என இஸ்ரேல் கூறியிருந்தது. அதேபோல், போரை நிறுத்த ஹமாஸ் அமைப்பினரும் சில நிபந்தனைகளை விதித்திருந்தனர்.

இதனால் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு மரண பயத்தை காட்டும் விதமாக, அவரது இல்லம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது லெபனான்.

ஹிஸ்புல்லாவின் தலைவரான ஹசன் நஸ்ரல்லா சில வாரங்களுக்கு முன் இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் கொல்லப்பட்டார். இதற்கு பதிலடி கொடுக்க ஈரான் நேரடியாக இஸ்ரேல் மீது கடந்த 1ம் தேதி ஏவுகனை தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து ஹமாஸ் படைத் தலைவர் யஹ்யா சின்வார் தங்கியிருந்த கட்டடம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அக்டோபர் 23ம் தேதி நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் யஹ்யா சின்வார் உயிரிழந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் சொகுசு பங்களா மீது லெபனான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதில் உயிர் சேதாரம் ஏதும் ஏற்படவில்லை என்றாலும் சொகுசு பங்களாவின் ஒரு பகுதி உடைந்து சுக்குநூறாகியது. 

இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற இஸ்ரேல் ஈரான் மீது அக். 26ம் தேதி அதிகாலை வான்வெளி தாக்குதலை தொடங்கியது. ஈரான் தலைநகர் டெக்ரான் மற்றும் அதன் அருகே உள்ள கராஜ் நகரங்களை குறிவைத்து இஸ்ரேல் சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதனால் ஈரானில் பெரும் போர் பதற்றம் நிலவியுள்ளது. ஈரான் தலைநகரான தெஹ்ரானில், வெடிப்புகளின் சத்தம் கேட்டதாகத் தெரிவித்த அந்நாட்டு ஊடகங்கள், நகரத்தைச் சுற்றியுள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளிலிருந்து ஒலிகள் வந்ததாகவும் தெரிவித்தன. 

இந்நிலையில், லெபனான் மீது இஸ்ரேல் நேற்று மீண்டும் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 21 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க: ”திமுகவை யாராலும் அசைக்க முடியாது” - விஜய் குறித்த கேள்விக்கு அமைச்சர் கொடுத்த பதில்!

இஸ்ரேலிய தாக்குதல்களால், காசாவில், அக்டோபர் 7, 2023 முதல்  குறைந்தது 42,924 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 100,833 பேர் காயமடைந்துள்ளனர். ஹமாஸ் தலைமையிலான தாக்குதல்களின் போது இஸ்ரேலில் 1,139 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 200 க்கும் மேற்பட்டோர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர் என தரவுகள் தெரிவிக்கின்றனர்.