Kumudam News 24 X 7 AMP Article
உலகம்

52 ஆண்டுகள் குடலில் இருந்த பிரஷ்.. 12 வயதில் விழுங்கிய பிரஷ் 64 வயதில் கண்டுபிடிப்பு!

By VASUKI
25 Jun 2025, 12:59 AM
சீனாவின் ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த 64 வயதுடைய லீ என்ற முதியவர், சில வாரங்களுக்கு முன் கடுமையான வயிற்று வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அப்போது அவரது வயிற்றில் இருந்த பொருளை பார்த்து மருத்துவர்களே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
64 வயதுடைய லீ என்ற முதியவரின் வயிற்றில், டாக்டர்கள் அவரது குடலில் நீண்ட பொருள் ஒன்று சிக்கி இருப்பதை கண்டறிந்தனர். அவருக்கு உடனடியாக அறுவைசிகிச்சை மூலம் அதனை அகற்றியபோது, அது ஒரு டூத் பிரஷ் என்பது தெரியவந்ததுள்ளது.

பின்னர் மருத்துவர்களின் கேள்விக்கு பதிலளித்த லீ, அதனை 12 வயதில் தவறுதலாக விழுங்கிவிட்டதாக தெரிவித்தார். பெற்றோரிடம் சொன்னால் கடுமையாக திட்டுவார்கள் என்ற பயத்தால் அந்த விஷயத்தை மறைத்து வைத்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

அதன்பின் எந்தவிதமான உடல் குறைபாடும் ஏற்படவில்லை என்பதால் அவர் வாழ்க்கையை சாதாரணமாகவே வாழ்ந்துள்ளார். ஆனால் வயதுடன் கூடிய உடல்நிலை மாற்றங்கள் காரணமாக பிரஷ் குடலில் சிக்கி இருந்ததால் தன்னுயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று பயந்த நிலையில் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

இதனை பார்த்த மருத்துவர்கள் இதனை மிக அபூர்வமான, அபாயகரமான சம்பவமாகவும் குறிப்பிடுகிறார்கள். இவ்வாறு அலட்சியமாக இருந்தால், சில நேரங்களில் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படும் என்று தெரிவித்த மருத்துவர்கள், "குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் யாராக இருந்தாலும், ஏதேனும் ஒரு பொருள் விழுங்கிவிட்டால், உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்" என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.