சென்னையை அடுத்த மாடம்பாக்கத்தில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் தாமோ அன்பரசன், “இன்று நடிகர் எல்லாம் அரசியல் பக்கம் வந்துவிட்டனர். யார் அரசியலுக்கு வந்தாலும் திமுகவினர் பயப்படக்கூடாது. என்றும் நிலைத்திருக்கும் ஒரே கட்சி திமுகதான். விஜய் நடித்த படமே 2 நாட்களுக்கு மேல் தியேட்டரில் ஓடவில்லை. அதனால் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 6 மாதங்கள்தான் தாக்கு பிடிக்கும். அதற்கு மேல் தாங்காது” என தெரிவித்துள்ளார்.