Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

அருவியில் குளிக்கத்தடை விதித்தது வனத்துறை!

By leninakathiya
12 Oct 2024, 09:11 PM
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி அருவிக்கு செல்லவும், அருவியில் குளிக்கவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். நீர்வரத்து குறைந்து சீராகும் வரை சுற்றுலா பயணிகள் குளிக்க தடை தொடரும் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.