பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனார் நினைவிடத்துக்கு மதிமுகவினர் மரியாதை செலுத்த வந்தனர். அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தர இருந்ததால் மதிமுகவினரை போலீசார் காத்திருக்க வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.