வீடியோ ஸ்டோரி

கையெழுத்து இயக்கம்... TVK Vijay-யின் ஸ்மார்ட் மூவ்! உஷாரான Prashant Kishor

By VASUKI
27 Feb 2025, 10:10 AM
தவெக இரண்டாவது ஆண்டு தொடக்க விழாவில், Get Out கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார், அக்கட்சியின் தலைவர் விஜய். இந்த Get Out ஐடியாவை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தான் கொடுத்திருப்பார் என சொல்லப்படும் நிலையில், அவர் கையெழுத்து போடாமல் தவிர்த்தது ஏன் என்பது, பேசுபொருளாகியுள்ளது. அதுகுறித்து இப்போது பார்க்கலாம்.

கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் களத்தில் Get Out என்ற ஹேஷ்டேக் பெரும் புயலை கிளப்பி வருகிறது. Get Out மோடி என திமுகவும், Get Out ஸ்டாலின் என பாஜகவும் மாறி மாறி ட்ரெண்ட் செய்து வந்த நிலையில், அதே Get Out-ஐ வைத்து திமுக, பாஜகவை ஒரே போடாக போட்டுத் தாக்கியுள்ளார் தவெக தலைவர் விஜய்.

 சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டுன கதையாக தொடங்கிய இந்த Get Out ட்ரெண்ட், இப்போது தவெகவின் தாரக மந்திரமாக மாறியுள்ளது. ஆம்! தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது ஆண்டு தொடக்கவிழா, மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் உள்ள தனியார் விடுதியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.