Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

டெல்லி முதலமைச்சராக ரேகா குப்தா தேர்வு

By VASUKI
19 Feb 2025, 09:56 PM
தலைநகர் டெல்லியின் புதிய முதலமைச்சராக ரேகா குப்தா தேர்வு

டெல்லியின் புதிய முதலமைச்சராக ரேகா குப்தா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நாளை ராம்லீலா மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 5ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற்றது. 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி கட்சி 22 இடங்கள் மட்டுமே பெற்றது. டெல்லி முன்னாள் முதலமைச்சர் அர்விர்ந்த் கெஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியில் தோல்வி அடைந்தார்.

டெல்லியில் 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சியை கைப்பற்றிய நிலையில் டெல்லியின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற எதிர்பார்ப்பு தீவிரம் அடைந்தது. டெல்லி முதலமைச்சராக பர்வேஷ் வர்மா, விஜேந்தர் குப்தா, ரேகா குப்தா உள்ளிட்ட தலைவர்கள் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியது.