Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

ஒரே நாளில் ராமேஸ்வரம் மீனவர்கள் 33 பேர் கைது

By VASUKI
26 Jan 2025, 05:59 PM
கடலில் மீன்பிடித்தபோது, எல்லை தாண்டியதாக ராமேஸ்வரத்தை சேர்ந்த 33 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்து; அவர்களது 3 படகுகளை பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை 436 விசைப்படகுகளில் 2000கும் மேற்பட்ட மீனவர்கள், கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

நள்ளிரவில் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, தலைமன்னார், கச்சத்தீவு பகுதிகளில் இருந்து 15க்கும் மேற்பட்ட ரோந்துப் படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தடுத்து விரட்டியடித்துள்ளனர்.