கோவையில் செய்தியாளர்களை சந்தித்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இசையமைப்பாளர்கள் பழைய பாடல்களை ரீமேக் செய்வது அவர்களின் மற்றொரு வெர்சனாக பார்ப்பதாகவும், அதனால் பாடலின் ஒரிஜினாலிட்டி மாறாது எனவும் கூறினார். மேலும், AI தொழில்நுட்பத்தில் உண்மைத் தன்மை இருக்காது என்று ஏ.ஆர்.ரகுமான் கூறியது உண்மைதான் எனவும் சுட்டிக்காட்டினார்.