திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் பிரியதர்ஷினி, 18 வயதே ஆன பிரியதர்ஷினி, வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில், வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பிரியதர்ஷினியின் பெற்றோரும், அவரது உறவினர்களும், பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.