Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

முதலீட்டாளர்கள் மாநாடு 8 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் | Kumudam News 24x7

By nishika
30 Aug 2024, 04:50 PM
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகின.

தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில், 17 நாட்கள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். இந்த நிலையில், சான் பிரான்சிஸ்கோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் 8 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இதுவரை மொத்தமாக சுமார் 900 கோடி முதலீட்டில் நான்காயிரத்து 100 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.