அமெரிக்காவில் நவம்பர் 5ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், டொனால்ட் டிரம்ப்- கமலா ஹாரிஸ் இடையே முதல் நேரடி விவாதம் நடந்தது. அரசியலமைப்பின் மீது டிரம்ப்புக்கு எந்த மரியாதையும் இல்லை என கமலா ஹாரிஸ் குற்றம்சாட்டினார். கமலா ஹாரிஸ் ஒரு மார்க்சிஸ்ட் என டிரம்ப் விமர்சித்தார்.