Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

விநாயகர் சதுர்த்தி சுற்றறிக்கை ரத்து : அரசு அறிவிப்பு

By saravanakmr
05 Sep 2024, 12:18 PM
அரசுப் பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி தொடர்பாக உறுதிமொழி ஏற்க அறிவுறுத்தி வெளியிடப்பட்ட சுற்றறிக்கை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை பொதுமக்களுக்கானது. தவறான புரிதலால் பள்ளிகளுக்கு விநாயகர் சதுர்த்தி தொடர்பாக உறுதிமொழி சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது அரசின் ஆணைகளுக்கு முற்றிலும் முரணானது என்பதால் அந்த சுற்றறிக்கை ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது