Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு!

By Kumudam News
01 Sep 2024, 12:38 AM
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதிக்கப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் செப்டம்பர் 11ம் தேதி அனுசரிக்கப்பட உள்ளது. இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் பகுதியில் அக்டோபர் 30ம் தேதி முத்துராமலிங்க தேவரின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 9ம் தேதி முதல் அக்டோபர் 31ம் தேதி வரை என சுமார் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் உத்தரவிட்டுள்ளார். இந்த இரண்டு மாதமும் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதிக்கப்படுகிறது. இதேபோல் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த வாகனங்கள் ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் உரிய அனுமதியின்றி நுழையத் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.