தொழில்நுட்பம்

டேட்டா சென்டர்களால் காலியாகும் தண்ணீர்…. தகவல் மையங்களின் இருண்ட முகம் !

By Sumalekha
10 Jun 2026, 10:43 AM
டிஜிட்டல் உலகத்தின் தகவல்களை சேமிக்கும் தகவல் மையம் என்னும் ”டேட்டா சென்டர்களால்” சுற்றுசூழல் எவ்வாறு மாசுப்படுகிறது என்பதை இந்த செய்தித் தொகுப்பு அலசுகிறது
அண்மைக் காலமாக தகவல் மையங்கள் என்பது உலகம் முழுவதும் வேகமாக வளர்ந்து வருகின்ற ஒரு துறையாக இருக்கிறது. செயற்கை நுண்ணறிவின் எதிர்பாராத வளர்ச்சி, டிஜிட்டல் தொழில்நுட்ப சேவைகள், இணைய பயன்பாட்டின் அசுர வளர்ச்சி போன்றவை பெருமளவில் தகவல் மையங்களின் தேவையை அதிகரித்திருக்கின்றன.இந்தியாவில் மட்டும் தற்போது 275 க்கும் மேற்பட்ட தகவல் மையங்கள் இயங்கிவருகின்றன. 2020 ஆம் ஆண்டில் 520 மெகாவாட்டாக இருந்த தகவல் மையங்களின் திறன் 2025 க்குள் ஒன்றரை மடங்காக அதிகரித்திருக்கிறது. இன்னும் ஐந்தாண்டுகளில் இது மேலும் 4 – 5 மடங்காக அதிகரிக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

தகவல் மையங்களின் வளர்ச்சியை நம் நாட்டின் வளர்ச்சி என்று பெருமைப்பட்டுகொண்டாலும் உலகம் முழுவதும் இம்மையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப சேவைகள், இணைய பயன்பாட்டின் வளர்ச்சி போன்றவை பெருமளவில் தகவல் மையங்களின் தேவையை அதிகரித்திருக்கின்றன.

இந்த தகவல் மையத்தின் மிக முக்கியமான பிரச்சனையே தண்ணீரின் தேவையைதான், ஒரு மெகாவாட் தகவல் தொழிற்சாலைக்கு ஏறத்தாழ 68,500 லிட்டர் தண்ணீரை நாள்தோறும் பயன்படுத்தப்படுகிறது. இந்தியா முழுவதும் இவ்வாறு நாள்தோறும் 15,000 கோடி லிட்டர் தண்ணீர் தகவல் மையங்களுக்காகச் செலவாவதாக சுற்றுசூழல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த தகவல் மையங்களால் தண்ணீர் மட்டும் அதிகமாக வீணாகவில்லை மின்சாரமும் அதிக அளவில் வீணாக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்தியாவில், மின்சார உற்பத்தி பெருமளவில் படிம எரிபொருளான நிலக்கரியை சார்ந்தே உள்ளது. அதிக அளவில் மின்சாரம் தேவை என்பதால் அதிக அளவில் நிலக்கரியை எரிக்க வேண்டும். இப்படி எரிப்பதனால் ஏராளமான கார்பன் உமிழ்விற்கும் காரணமாக இருப்பதோடு, இப்பெருநிறுவனங்களின் வளர்ச்சி இந்தியாவின் கார்பன் உமிழ்வுக் குறைப்புக்கான இலக்கை அடைவதையும் கேள்விக்கு உள்ளாக்குகிறது. இதுமட்டுமில்லாமல், இந்த உற்பத்தியினால் ஏராளமான மீள்புதுப்பிக்க முடியாத அல்லது மறுசுழற்சியோ செய்யமுடியாத நச்சுக்குப்பைகளை உருவாக்க நேரிடும் என்றும் இதனால் வழக்கதிற்கு அதிகமான வெப்பம் வெளியேறும் என சுற்றுசூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.