தொழில்நுட்பம்

மொபைலில் இந்த ஆப் யூஸ் பண்றீங்களா? உடனே டெலிட் பண்ணுங்க

By MUTHUKRISHNAN
09 Jun 2025, 03:02 PM
20-க்கும் மேற்பட்ட ஆபத்தான கிரிப்டோ வாலட் செயலிகள் ப்ளே ஸ்டாரில் இருப்பதாகவும், அதனை பயனர்கள் உடனடியாக தங்களது மொபைல் போன்களில் இருந்து டெலிட் செய்யுமாறும் சைபர் பாதுகாப்பு நிறுவனமான CRIL தெரிவித்துள்ளது.
நமது மொபைல் போன்களில் தற்போது உணவு டெலிவரிக்கு, வங்கி பயன்பாட்டிற்கு, பணப்பரிவர்த்தனைக்கு, டிரேடிங் மேற்கொள்ள என குறைந்தது 50 செயலிகளையாவது நிறுவி, அதனை பயன்படுத்தி வருகிறோம். இன்றைய காலத்தில் சைபர் அட்டாக் என்பது டெக் வல்லுநர்களுக்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ள நிலையில், கிரிப்டோ வாலட்டை குறிவைத்து 20-க்கும் மேற்பட்ட செயலிகள் கூகுள் ப்ளே ஸ்டோரில் உலவுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சைபர் பாதுகாப்பு நிறுவனமான CRIL (cyble Research and Intelligence Labs), முறையான டிஜிட்டல் வாலட்களின் பெயர் மற்றும் அதன் ஐகான் லோகோவினை பயன்படுத்தி சில போலி செயலிகள் ப்ளே ஸ்டாரில் இடம்பெற்றுள்ளன. இந்த செயலிகளை பயனர்கள் தங்களது போன்களில் நிறுவி, திறக்கும் போது ஃபிஷிங் வலைத்தளம் அல்லது செயலியின் வாயிலாக மற்றொரு WebView-ஐத் திறந்து உங்களது கிரிப்டோ வாலட்களில் உள்ள கரன்சியை மற்றொரு கணக்கிற்கு மாற்றக்கூடிய மோசடி வேலை நடைபெறுவதாக கண்டறியப்பட்டுள்ளது.



CRIL வெளியிட்டுள்ள அறிக்கையில், 20-க்கும் மேற்பட்ட ஆப்கள் கிரிப்டோ வாலட்டை குறிவைத்து இறங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கை கிரிப்டோ வாலட் செயலிகளை பயன்படுத்தும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. sushiswap, pancakeswap, Hyperliquid, raydium போன்ற பெயர்களில் இந்த செயலிகள் ப்ளே ஸ்டோரில் இடம் பெற்றுள்ளதாகவும் CRIL குறிப்பிட்டுள்ளது.

போலி செயலியை கண்டறிவதிலுள்ள பெரிய சவால் என்னவென்றால், ஒரே பெயரில், வெவ்வேறு டெவலபர்கள் உருவாக்கிய செயலிகள் ப்ளே-ஸ்டாரில் உள்ளது தான். பின்வரும் செயலிகளின் பெயரில் பல ஆப்கள் உள்ளதாக CRIL நிறுவனம் தெரிவித்துள்ளது.

--->Pancake Swap

--->Suiet Wallet

--->Hyperliquid

--->Raydium

--->BullX Crypto

--->OpenOcean Exchange

--->Meteora Exchange

--->SushiSwap

--->Harvest Finance Blog




இந்த செயலிகளை உங்களது போன்களில் பதிவிறக்கம் செய்திருந்தால், அதனை உடனடியாக டெலிட் செய்யுமாறு சைபர் பாதுகாப்பு நிறுவனமான CRIL தெரிவித்துள்ளது. இதற்கு காரணம், மேலே கூறியது போல் உங்களது கிரிப்டோ கணக்குகளில் சைபர் அட்டாக் செய்து உள்நுழைந்து அதன் கரன்சிகளை நொடிப்பொழுதில் மற்றொரு கணக்கிற்கு மாற்றி உங்களது கிரிப்டோ அக்கௌண்ட் மதிப்பினை ஜீரோவாக மாற்றிவிடும். தனிநபர் பயனர் தகவல்களும் கசிய வாய்ப்புள்ளது.

பயனர்களுக்கானஅறிவுறுத்தல்:

1. அதிகாரப்பூர்வமற்ற மூலங்களிலிருந்து கிரிப்டோ செயலிகளை பதிவிறக்குவதை தவிர்க்கவும்.
2. செயலியை இன்ஸ்டால் செய்வதற்கு முன்பு அதன் டெவலப்பர் விவரங்களை சரிபார்க்கவும்
3. புதிதாக ஒரு கிரிப்டோ வாலட் செயலியினை பயன்படுத்தும் போது எக்காரணத்து கொண்டும் உங்களது 12-வார்த்தை மீட்பு சொற்றொடரை (12 word recovery phrase) ஒருபோதும் உள்ளிட வேண்டாம் எனவும் பயனர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.