Kumudam News 24 X 7 AMP Article
விளையாட்டு

44 -வது பிறந்த நாளை கொண்டாடும் எம்.எஸ். தோனி.. ரசிகர்கள் வாழ்த்து!

By VASUKI
07 Jul 2025, 05:39 PM
இந்திய கிரிக்கெட் உலகின் மன்னன், அசாதாரண நாயகன், கேப்டன் கூல், தல என அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி இன்று (ஜூலை 7) தனது 44-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். சமூக வலைதளங்களில் ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தன்னுடைய 18 வயதில் பீகார் அணிக்கான ரஞ்சி கோப்பையில் அறிமுகமான தோனி, தன்னுடைய அசத்தலான செயல்பாட்டின் அடிப்படையில் இந்திய அணியில் இடம்பிடித்தார். அதன்பிறகு முதன்முதலில் 2004 ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக ஒருநாள் போட்டியிலும், 2005 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டிலும், 2006 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டி20 கிரிக்கெட்டிலும் அறிமுகமாகி, இந்தி2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் இன்றளவும் அனைவராலும் கொண்டாடப்படுகிறார். ஒரு வருடத்தில் 4 மாதம் மட்டுமே, அதாவது ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வரும் தோனிக்கு நாளுக்கு நாள் அவருக்கான ரசிகர்கள் அதிகரித்து கொண்டே இருக்கிறார்கள்.

பின்னர் 2007ல் உலகக்கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணியின் கேப்டனாக தோனி தேர்வு செய்யப்பட்ட தோனி தன்னுடைய முதல் தொடரிலேயே இந்திய அணி டி20 சாம்பியன் பட்டத்தை வென்றது.இந்திய அணியை தோனி, ஒவ்வொரு போட்டியிலும், மிகச்சிறப்பாக வழிநடத்தினார். அதன்பலனாக, 2011-ல் இந்திய அணியை 50 ஓவர் உலகக்கோப்பையை கைப்பற்றி வரலாற்று சாதனைப்படைத்தது. 2013-ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியையும் வென்தன் மூலம் கிரிக்கெட் வரலாற்றிலே மூன்று ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்த ஒரே கேப்டனாக என்ற பெருமையுடன் தற்போது வரை தோனி திகழ்கிறார்.

ஒருநாள் போட்டிகளில் விக்கெட் கீப்பிங்கில் 317 கேட்சுகளும் 122 ஸ்டம்பிங்குகளும் எடுத்துள்ளார். டி20 போட்டிகளை பொருத்தவரை, 98 போட்டிகள் விளையாடி 1,617 ரன்கள் எடுத்துள்ளார். சர்வதேச போட்டிகளில் இந்தியாவிற்காக கேப்டனாக, பேட்ஸ்மேனாக, விக்கெட் கீப்பராக பன்முகத்திறமையுடன் சிறப்பாக செயலாற்றி வந்த தோனி, 2020 ஆகஸ்ட் 15 ஆம் நாள் அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தொடர்ந்து சென்னை அணிக்காக விளையாடி வரும் தோனியை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இப்படி பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான தோனிக்கு ஐசிசி சமீபத்தில், hall of fame விருது வழங்கி கவுரவித்துள்ளது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு அவரது ரசிகர்கள், விளையாட்டு வீரர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.