Kumudam News 24 X 7 AMP Article
விளையாட்டு

IND vs PAK: மகளிர் உலகக் கோப்பை போட்டி.. அக்டோபர் 5ல் கொழும்புவில் இந்தியா - பாகிஸ்தான் பலபரீட்சை!

By VASUKI
16 Jun 2025, 03:06 PM
மகளிர் ODI உலக கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் 5ஆம் தேதி இலங்கையின் கொழும்பு மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் இத்தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடும் அனைத்து போட்டிகளும் கொழும்புவில் நடத்தப்படவுள்ளன.
2025 மகளிர் ஒடிஐ உலகக் கோப்பை தொடரை இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்த உள்ளன. இந்த தொடரின் மிக எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் ஒன்றான இந்தியா – பாகிஸ்தான் மோதல், அக்டோபர் 5 ஆம் தேதி இலங்கையின் கொழும்பு நகரத்தில் நடைபெறவுள்ளது.

இந்த முக்கியமான ஆட்டம், ரி. பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடக்கவிருப்பதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) அறிவித்துள்ளது. இந்தியா – பாகிஸ்தான் போட்டி என்றாலே ரசிகர்களிடையே மிகுந்த பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மகளிர் அணிகளுக்கிடையே நடைபெறும் இந்த மோதல் சர்வதேச அளவில் சிறப்பான கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்த உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடும் அனைத்து போட்டிகளும் இலங்கை தலைநகர் கொழும்புவில் நடத்தப்பட உள்ளன. இருநாட்டு உறவுகளில் ஏற்பட்டுள்ள விரிசலை தொடர்ந்து, இந்தியாவில் பாகிஸ்தான் அணி விளையாடும் போட்டிகள் மட்டும் பாதுகாப்பு காரணங்களால் இலங்கையில் உள்ள கொழும்புவில் நடைபெறவுள்ளன.

இந்திய மகளிர் அணி கடந்த சில வருடங்களில் கடந்த சில வருடங்களாக ஐசிசி மற்றும் பிசிசிஐ நடத்தும் போட்டிகளில் தொடர்ந்து அபாரமாக விளையாடி தரவரிசையில் முன்னேற்றம் பெற்றுள்ளது. ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, இம்முறை உலகக்கோப்பையை வெல்லும் திட்டத்தோடு வலுவாக தயாராகி வருகிறது. அதேசமயம் பாகிஸ்தானும் புதிய வீராங்கனைகள் மற்றும் புதுப்பித்த அணியுடன் உலக அரங்கில் தனது சாதனை காட்ட முனைந்து உள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் இந்த போட்டி உலகளவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.