ஐபிஎல் 2027 சீசனுக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் அடுத்தகட்ட பயணம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து ஹர்திக் பாண்டியா வெளியேறலாம் என்ற தகவல்கள் பரவி வரும் நிலையில், அவரை அணியில் இணைக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) தீவிரமாக முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், KKR நிர்வாகத் தலைவர் (KKR CEO) வெங்கி மைசூர் ஹர்திக் பாண்டியா இடையே நேற்று முக்கியமான ஆலோசனை நடைபெற்றதாகவும், இந்த பேச்சுவார்த்தையில் kKKR அணிக்கு மாறுவதற்கான தனது எதிர்பார்ப்புகள் மற்றும் நிபந்தனைகளை ஹர்திக் தெளிவாக எடுத்துரைத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹர்திக் பாண்டியாவின் எதிர்காலம் குறித்த விவாதம், 2026 ஐபிஎல் சீசனுக்குப் பிறகு தீவிரமடைந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி 2026 சீசனில் எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை என்பதும், ஹர்திக்கின் எதிர்காலம் குறித்த கேள்விகள் எழுவதற்கு ஒரு காரணமாக அமைந்துள்ள நிலையில் KKR நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலையில், ஹர்திக் பாண்டியா KKR அணியிடம் முக்கிய கோரிக்கையாக முழு நேர கேப்டன் பொறுப்பு கேட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. பகிரப்பட்ட கேப்டன்சி, இடைக்கால கேப்டன்சி அல்லது எதிர்காலத்தில் கேப்டன்சி வழங்கப்படும் வாக்குறுதிகள் எதிர்பாராமல், அணியில் இணைந்தால் தனது தலைமையில் அணியை கட்டமைக்கும் முடிவைன் நான்தான் எடுப்பேன் என்பதே அவரது எதிர்பார்ப்பாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
KKR அணிக்கு புதிய தலைமையை உருவாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், ஹர்திக் பாண்டியா போன்ற சர்வதேச அனுபவம் கொண்ட வீரரை கேப்டனாக கொண்டு வருவது அணியின் நீண்டகால திட்டத்துக்கும், அணிக்கும் பெரும்உதவியாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
அதுமட்டுமின்றி, குறிப்பாக போட்டிகளின் இறுதி ப்ளெயிங் 11 அமைப்பதில் தனது கருத்துக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும், அணியின் கலவையைத் தீர்மானிப்பதில் கேப்டனாக தனக்கு அதிக அதிகாரம் இருக்க வேண்டும் என்றும் அவர் விரும்புவதாகவும், இது நடைமுறைக்கு வந்தால், கேப்டன், பயிற்சியாளர் மற்றும் நிர்வாகம் ஆகியோருக்கு இடையேயான முடிவெடுக்கும் அமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது என தகவல்கள் பரவி வருகின்றன.
அதுமட்டுமின்றி, அணியின் பயிற்சியாளர் மற்றும் துணை பயிற்சியாளர்கள் தேர்ந்தெடுப்பதில் ஹர்திக் பாண்டியா தனது கருத்தை பதிவு செய்ய விரும்புவதாகக் கூறப்படுகிறது. தனது கிரிக்கெட் பார்வைக்கும் தலைமைத்துவ அணுகுமுறைக்கும் ஏற்ற வகையில் அணியின் சூழலை உருவாக்க விரும்புவதாலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அணியின் நிர்வாகம் ஆகியோருக்கு இடையே ஒருங்கிணைந்த நற்ச்சூழலை உருவாக்க வேண்டும் என்பது ஹர்திக்கின் நோக்கமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இந்த தகவல்களுக்கு ஏற்றவாறு, பிரபல கிரிக்கெட் பத்திரிகையாளர் ரோஹித் ஜூக்லான் அவரது எக்ஸ் தள பக்கத்தில் "Update, HP💜 (C), PS - sorry CSK fans" என்று "ஹர்திக் பாண்டியா KKR அணியின் கேப்டனாக ஆகப்போகிறார், மன்னித்துவிடுங்கள்! CSK ரசிகர்களே"என்ற விதத்தில் பதிவிட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கும் CSK ரசிகர்களுக்கும் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.