ஆய்வுகள் சொல்வது என்ன?
கருஞ்சீரகத்தில் உள்ள ஆன்டிஆக்ஸி டன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்புச் சேர்மங்கள், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துவதோடு, செல்களை ஆக்ஸி டேட்டிவ் சேதத்திலிருந்து பாதுகாக்கவும் உதவக்கூடும். இதில் காணப்படும் பிளேவனாய்டுகள் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகளைக் கொண்டவை. இவை செல்களைப் பாதுகாப்பதுடன், புற்றுநோய் தொடர்பான ஆய்வுகளிலும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளன.
குறிப்பாக, தைமோகுயினோன் உள்ளிட்ட கருஞ்சீரகச் சேர்மங்கள் சில ஆய்வக மற்றும் விலங்கு ஆய்வுகளில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கக்கூடிய திறனை வெளிப்படுத்தியுள்ளதாக ஆய்வுகள் கூறியுள்ள நிலையில் மனிதர்களில் இதன் மருத்துவப் பயனை உறுதிப்படுத்த மேலும் விரிவான ஆய்வுகள் தேவை கருஞ்சீரகத்தில் உள்ள தைமோ ஹைட்ரோ குயினோன் நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் நரம்பு மண்டலப் பாதுகாப்பு பண்புகளைக் கொண்டதாகக் கருதப்படுகிறது.
இந்தச் சேர்மம் பாக்டீரியா உள்ளிட்ட சில நுண்ணுயிர்களுக்கு எதிராகச் செயல்படுவதுடன், நரம்பு செல்களைப்பாதுகாக்கவும் உதவக்கூடும் என ஆரம்பகட்ட ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
சரும நோய்கள்
தோல் நோய்களுக்கும் கருஞ்சீரகம் ஒரு நல்ல மருந்து, சுருஞ்சீரகத்தின் தைமோல் எனும் மூலக்கூறு பாக்டீரியா, பூஞ்சை மற்றும் ஒட்டுண்ணிகளுக்கு எதிராகச் செயல்பட்டு தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்த உதவுக் கூடியது. எனவே கரப்பான், சொரியாசிஸ் உள்ளவர்கள் கருஞ்சீரகத்தைப் பொடியாக்கி தேய்த்துக் குளிக்கலாம். இதனால் நோயின் தீவிரம் குறையும். புண்களும் தழும்புகளும் மறையும். குளியல் பொடிகளிலும் இதைச் சேர்த்துப் பயன்படுத்தலாம்.
பெண்களுக்கு கருஞ்சீரகம்
சித்த மருத்துவத்தில் மாதவிடாய் கால வயிற்றுவலி, அதிக ரத்தப்போக்கு உடல் சோர்வு போன்றவற்றைக் குறைக்க கருஞ்சீரகம் பரிந்துரைக்கப்படுகிறது. பிரசவத்துக்கு பிறகு உடல் வலிமை, தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கவும் பல மூலிகைகளுடன் கருஞ்சீரகமும் பாரம்பரிய மருத்துவ கலவைகளில் சேர்க்கப்படுகிறது.
சளி, இருமல் பிரச்னை
சளி, இருமல், ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்னைகளில் முன்னோர்களால் வீட்டு வைத்தியத்தில் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதிலுள்ள தைமோல் மற்றும் நைஜெல்லோன் போன்ற சேர்மங்கள் சுவாசப் பாதையை சீராக்க உதவக்கூடும். மேலும் செரிமானத்தை மேம்படுத்தி அஜீரணம், வயிற்று உப்புசம். வாய்வுத் தொல்லை போன்றவற்றைக் குறைக்கவும் பயன்படுகிறது.
எதற்கு? எப்படி?
சளி, இருமல் இருக்கும்போது கருஞ் சீரகத்தை வறுத்து பொடி செய்து தேனுடன் குழைத்து சாப்பிட்டால் அறிகுறி குறையும். கருஞ்சீரகத்தில் காணப்படும் ஆல்பாபைனின் சுவாசப்பாதையை விரிவடையச் செய்து சுவாசத்தை எளிதாக்க செய்யும்.
மூக்கடைப்பு பிரச்னை இருக்கும்போது ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகப்பொடியை 50 மில்லி தேங்காய் எண்ணெய் சேர்த்துக் காய்ச்சி அதில் இரண்டு சொட்டு மூக்கில் விட்டால் மூக்கடைப்பு சரியாகும். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தவிர்க்க வேண்டும்.
சிறுநீரக கற்கள் கரைந்து வெளியேற சிகிச்சை எடுப்பவர்கள் மருந்துடன் அரை டீஸ்பூன் கருஞ்சீரகப்பொடியை வெந்நீர், தேன் கலந்து அருந்தினால் சிறுநீரகக் கற்கள் வெளியேற துணைபுரியும். காலை, மாலை என இரண்டுவேளையும் தொடர்ந்து அருந்தினால் பலன் கிடைக்கும். மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் எடுக்க வேண்டாம்.
மாதவிடாய்க் கோளாறுகளின்போது அடிவயிறு கனமாகி, சிறுநீர் கழிக்கச் சிரமப்படும் பெண்களுக்கு இது நல்ல மருந்து வறுத்துப் பொடித்த கருஞ்சீரகத்துடன் தேன் அல்லது கருப்பட்டி சுலந்து, மாதவிடாய் தேதிக்கு 10 நாள்கள் முன்பிருந்தே ஒரு டீ ஸ்பூன் சாப்பிடலாம். இது வயிற்று வலி, ரத்தப்போக்கு உள்ளிட்ட மாதவிடாய்ச் சிக்கல்களை சரி செய்யும்: சிறுநீர் வெளியேற உதவும் கருஞ்சீரகத்துடன் சதக்குப்பை, மரமஞ் சள் போன்ற மூலிகைகளை சம அளவு எடுத்துப் பொடியாக்கி காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஒழுங்கற்ற மாதவிடாய்க்கோளாறில் தொடங்கி கர்ப்பப்பை நீர்க்கட்டி உள்ளிட்ட பிரச்னைகள் கட்டுப்படும்.
இந்தப் பொடியைச் சாப்பிடும்போது வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். பிரசவத்துக்குப் பின்னர் கர்ப்பப்பையில் சேரும் அழுக்கை நீக்க ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகப் பொடியுடன் பனைவெல்லம் சேர்த்துச் சாப்பிடலாம். பிரசவலேகியம் செய்யும்போது மற்ற மூலிகைகளுடன் கருஞ்சீரகமும் அளவாக சேர்க்கலாம். குழந்தை பெற்ற மூன்றாவது நாளில் இருந்து காலை, மாலை என ஐந்து நாள்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.
பாரம்பரிய முறைகளில் நம் முன்னோர்கள் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகப் பொடியுடன் பனைவெல்லம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தனர்.
சுருஞ்சீரக எண்ணெயை தேங்காய் எண்ணெயுடன் கலந்து கூந்தலில் தடவி வந்தால் முடி உதிர்வது குறைந்து அடர்த்தி அதிகரிக்கும் முடி கருகருவென்று இருக்கும்.
கருஞ்சீரகம் ஆரோக்கியமானது. ஏராளமான மருத்துவக் குணங்களைக் கொண்டது. எனினும் ஒவ்வொருவரின் உடல் நலனுக்கேற்ப எடுத்துக்கொள்ளும் அளவு, எடுத்துக்கொள்ளும் முறை, கால அளவு வேறுபடும் என்பதால் மருத்துவரின் பரிந்துரையின்றி எடுத்துக்கொள்ளக் கூடாது.