அண்மை

'ஜனநாயகன்' பட விவகாரம்: வழக்கை விசாரிக்க விருப்பமில்லை- உச்சநீதிமன்றம் அதிரடி!

By Christon
15 Jan 2026, 11:26 AM
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் விவகாரத்தில், தயாரிப்பு நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற விசாரிக்க மறுப்பு தெரிவித்து தள்ளுபடி செய்துள்ளது.
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் விவகாரத்தில், தயாரிப்பு நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற விசாரிக்க மறுப்பு தெரிவித்து தள்ளுபடி செய்துள்ளது. இதனால் படத்தின் வெளியீடு குறித்த எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்குச் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

தணிக்கை வாரியம் மேற்முறையீடு

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்க மறுத்த தணிக்கை வாரியம், அதனை மறுஆய்வுக் குழுவிற்குப் பரிந்துரை செய்தது. இதனை எதிர்த்துத் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில், "சான்றிதழை உடனடியாக வழங்க வேண்டும்" எனச் சென்னை உயர் நீதிமன்றத் தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால், இதனை எதிர்த்துத் தணிக்கை வாரியம் தாக்கல் செய்த மேல்முறையீட்டில், உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் தனி நீதிபதியின் உத்தரவிற்குத் தடை விதித்தது.

மனு தள்ளுபடி

இந்தத் தடையை நீக்கக் கோரி கே.வி.என். புரோடக்‌ஷன் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு இன்று (ஜன.15) விசாரணைக்கு வந்தபோது, வழக்கை விசாரிக்கத் தாங்கள் விரும்பவில்லை என்றும், மீண்டும் உயர் நீதிமன்றத்தையே அணுகுமாறும் கூறி மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், ஜன.20 ஆம் தேதி உயர் நீதிமன்ற அமர்வு விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

ரசிகர்கள் மற்றும் படக்குழுவினர் அதிர்ச்சி

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால், படத்தின் வெளியீட்டுத் தேதி மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது. தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பதில் நிலவும் இந்தச் சிக்கல் காரணமாக, படம் வெளியாகுமா என்ற கவலையில் ரசிகர்கள் உள்ளனர்.