Kumudam News 24 X 7 AMP Article
அண்மை

பாஜக MLA டாக்டர் சரஸ்வதியின் மகள் காய்ச்சல் காரணமாக உயிரிழப்பு!

By MUTHUKRISHNAN
04 Jun 2025, 03:14 PM
மொடக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர், டாக்டர் சி.சரஸ்வதியின் மகள் கருணாம்பிகை காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரும், பா.ஜ.க வைச் சேர்ந்தவருமான டாக்டர் சி.சரஸ்வதியின் மகள் கருணாம்பிகை காய்ச்சல் காரணமாக கோவை அவிநாசி சாலையில் உள்ள கே.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

இச்சம்பவம் கட்சி வட்டாரத்திலும், மொடக்குறிச்சி தொகுதியிலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி, 1968 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழகத்தில் மருத்துவம் படித்து மருத்துவரானார். மேலும், 1972-ல் அதே பல்கலைக் கழகத்தில் குழந்தைகள் மருத்துவத்தில் பட்டயப்படிப்பினை பயின்று முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த கருணாம்பிகை, டாக்டர் சரஸ்வதியின் இரு குழந்தைகளில் ஒருவர் ஆவார். டாக்டர் சரஸ்வதிக்கு சிவகுமார் என்ற மகனும் உள்ளார். கருணாம்பிகை மறைவு பா.ஜ.க வட்டத்திலும், மொடக்குறிச்சி பகுதியிலும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட ஆற்றல் அசோக்குமாரின் மனைவி கருணாம்பிகை என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த கருணாம்பிகை-வுக்கு வயது 54. இவர் புகழ்பெற்ற கட்டட கலைஞராகவும், தொலைநோக்குள்ள கல்வியாளராகவும், தி இண்டியன் பப்ளிக் ஸ்கூல் குழுமத்தின் இணை நிறுவனராகவும் பொதுமக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.