Latest News

கைது செய்யப்படுகிறாரா MLA ஜெகன்மூர்த்தி? கூலிப்படை வைத்து ஆட்கடத்தல்?

By MUTHUKRISHNAN
14 Jun 2025, 04:51 PM
காதல் விவகாரத்தில் பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையை வைத்து இளைஞரை கடத்தியதாக கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகன்மூர்த்தியை கைது செய்ய போலீசார் வருகை தந்துள்ளனர்.
காதல் விவகாரத்தில் இளைஞரைக் கடத்திய வழக்கில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தியை கைது செய்ய போலீசார் வருகை தந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பூந்தமல்லியை அடுத்த ஆண்டர்சன்பேட்டையில் உள்ள ஜெகன் மூர்த்தியின் வீட்டில், அவரை கைது செய்ய போலீசார் வருகை தந்த நிலையில், புரட்சி பாரதம் கட்சியின் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார். பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞரின் சகோதரனை ஜெகன் மூர்த்தி கடத்தியதாக புகார் எழுந்துள்ளது.

இவ்விவகாரத்தில் பெண்ணின் தந்தை உள்பட 5 பேர் ஏற்கெனவே கைதாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.