Latest News

எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

By Jayakumar
10 Jun 2025, 10:25 AM
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இபிஎஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை அடையாறு கீரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. போலீசாரின் சோதனையில் அது புரளி என்பது தெரியவந்தது. இது மூன்றாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் மே 25ம் தேதி எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

போலீசார் விசாரணை

இதைத்தொடர்ந்து சென்னை மற்றும் சேலத்தில் உள்ள இபிஎஸ் வீட்டில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். சோதனையில் அது புரளி என தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு தொடர்ந்து இமெயில் மூலம் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.